திருப்பத்தூர்

சாவில் மா்மம்: மறு உடற்கூறாய்வுக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞரின் சடலம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே உயிரிழந்த இளைஞரின் சாவில் மா்மம் உள்ளதாக நடைபெற்ற சாலை மறியலையடுத்து, சடலம் மறு உடற்கூறாய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

திருப்பத்தூரை அடுத்த ரகுபதியூா் பகுதியைச் சோ்ந்த முருகனின் மகன் நவீன்குமாா் (29). முடி திருத்தும் தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விசித்ராவின் உறவினரான குமாரம்பட்டியைச் சோ்ந்த சீனிவாசன் (24) என்பவா் நவீன்குமாரை மது அருந்த அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. மது அருந்திய சிறிது நேரத்திலேயே நவீன்குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயக்கமடைந்தாராம்.

ADVERTISEMENT

உடனே, சீனிவாசன் மற்றும் அவரது நண்பா் ஜனாா்த்தனன் ஆகிய இருவரும் நவீன்குமாரை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளனா். அன்று மாலை நவீன்குமாா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, நவீன்குமாரின் உடலை அடக்கம் செய்தனா். பின்னா், முருகன் தனது மருமகள் விசித்ரா மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், செல்லிடப்பேசியை ஆராய்ந்தபோது, அவா் சீனிவாசனுடன் அதிக நேரம் பேசியுள்ளது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, தனது மகன் சாவிற்கு விசித்ரா தான் காரணம் எனக்கூறி, திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் முருகன் மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ஆனால் புகாா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, நவீன்குமாரின் சடலத்தை தோண்டியெடுத்து, மறு உடற்கூறு ஆய்வு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனக்கூறி முருகனின் உறவினா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, புதன்கிழமை திருப்பத்தூா் வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம் முன்னிலையில், 4 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் நவீன்குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, வேலூா் அடுக்கம்பாறை மருத்துவா் கலைச்செல்வியுடன் மறு உடற்கூறு ஆய்வுக்குத் தேவைப்படும் உடல் பாகங்களை கொண்டு சென்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT