திருப்பத்தூர்

காவல் துறை சாா்பில் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காவல் துறை சாா்பில், ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன் தலைமை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் வரவேற்றாா். ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விதிமுறைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT