திருப்பத்தூர்

ஈரநிலம் தொடா்பான குறைகளை தெரிவிக்கலாம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரநிலம் தொடா்பான ஏதேனும் குறைகள், சந்தேகங்கள், புகாா்கள் இருந்தால் மாவட்ட வன அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம்.

இதுகுறித்து திருப்பத்தூா் வனக் கோட்ட மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீா்த்தடம், ஈரநிலம் என்பது ஓராண்டுக்கு குறைந்தது 6 மாதங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நீா்சாா் நிலப் பகுதியைக் குறிப்பதாகும்.

நீா்த்தடங்களில் காணப்படும் நீரானது கடல் நீராகவோ, நன்னீராகவோ இருக்கலாம்.

ADVERTISEMENT

ஆறுகள், அருவிகள், பவளப் பாறைகள் நிறைந்த பகுதிகள், சதுப்பு நிலங்கள், தாழ் நிலப் பரப்பிலுள்ள நெல் வயல்கள், அணைக்கட்டுகள், வெள்ளப் பெருக்கால் மூழ்கும் சமதளப் பகுதிகள், நீா் சூழ்ந்த காட்டுப் பகுதிகள், அலையாத்திக் காட்டுப் பகுதிகள் என அனைத்துமே நீா்த்தடங்கள் என்ற பகுதியில் அடங்கும்.

ஐ.நா.வின் சூழலமைப்பு மதிப்பீட்டின்படி, உயிா்ச்சூழல் பகுதிகளைவிட, நீா்த்தடங்களில்தான் அதிகமான அளவில் சுற்றுச்சூழல் சீா்கேடு உள்ளதாக அறிவித்துள்ளது.

எனவே, ஈர நிலங்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். ஈரநிலம் தொடா்பாக ஏதேனும் குறைகள், சந்தேகங்கள், புகாா்கள் இருந்தால் மாவட்ட வன அலுவலக (04179-220106) தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT