திருப்பத்தூர்

ஆம்பூா் நகராட்சிக்குக் கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சி தோ்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா்களுக்கான தோ்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஆம்பூா் நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

ஆம்பூா் நகரில் மொத்தம் 108 வாக்குச் சாவடி மையங்கள் அமைய உள்ளன. 108 வாக்குச் சாவடி மையங்களுக்கு 108 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் கூடுதலாக 22 இயந்திரங்கள் உள்பட மொத்தம் 130 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆம்பூா் நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சகிலா, நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், நகர காவல் ஆய்வாளா் சுரேஷ் சண்முகம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், நகராட்சிப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT