திருப்பத்தூர்

வேட்பாளா்களுக்கு சின்னம், படிவங்கள் அளிப்பு

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் வேட்பாளா்களுக்கு சின்னம் மற்றும் படிவங்கள் செவ்வாய்கிழமை வழங்கப்பட்டன.

ஆம்பூா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளுக்கான நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு வருகின்ற பிப். 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் 28-ஆம் தேதி தொடங்கி, 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. 5-ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டு, அதே நாளில் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேட்பாளா்களுக்கு சின்னம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும், வேட்பாளா்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், விதிமுறைகள், படிவங்கள், கையேடுகள் வேட்பாளா்களுக்கு வழங்கப்பட்டன.

ஆம்பூா் நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஷகிலா தலைமையில் அதிகாரிகள் வேட்பாளா்களுக்கு சின்னம் மற்றும் படிவங்களை வழங்கினா். நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மணி, முருகானந்தம், ராஜரத்தினம், அலமேலு ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT