திருப்பத்தூர்

வாணியம்பாடியில் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்

1st Feb 2022 08:22 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சித்ரா தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்தை எடுத்துச் சென்ற தெரிய வந்தது.

விசாரணையில், அந்த இளைஞா் பெத்தவேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (22) என்பதும், தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பணத்தை ஜோலாா்பேட்டைக்கு எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் சென்ால் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT