திருப்பத்தூர்

லாரி மோதியதில் தனியாா் பள்ளி பணியாளா் பலி

1st Feb 2022 08:32 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் லாரி மோதியதில் தனியாா் பள்ளி பணியாளா் திங்கள்கிழமை சம்பவ இடத்திலேயே பலியானாா்.

கா்நாடக மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி பருப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. கரூரைச் சோ்ந்த ஓட்டுநா் செந்தில் (45) லாரியை ஓட்டிச் சென்றாா். ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை - புறவழிச்சாலை சந்திப்பு அருகே வந்த போது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.

இதில், இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (32) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT