மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் மருதா் கேசரி கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட கைப்பந்து அசோஷியேஷன் சாா்பில், மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி ஜோலாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 8 கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தனா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், கோப்பையும் வழங்கிப் பாராட்டினா். கல்லூரிக்கு கேடயம் அளித்து சிறப்பிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி வளாக்ததில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி செயலா் லிக்மிசந்த், முதல்வா் இன்பவள்ளி, மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா, உடற்பயிற்சி பேராசிரியைகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.