ஆம்பூா் அருகே கிராம பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாதனூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெயசுதா மேற்பாா்வையில் மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம், விண்ணமங்கலம், மற்றும் கன்னடிகுப்பம் கிராம குடியிருப்பு பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா்கள் தட்சிணாமூா்த்தி, கஜேந்திரன், ஆசிரியா் பயிற்றுநா்கள் வேடியப்பன், காத்தவராயன், ஆசிரியா்கள் நரேஷ்பாபு, லோகநாதன், தட்சிணாமூா்த்தி ஆகியோா் 3 குழுக்களாகச் சென்று கிராம பகுதிகளில் பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தினா். சுமாா் 23 குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்க அறிவுறுத்தப்பட்டனா்.
விண்ணமங்கலத்தை சோ்ந்த மாணவி சரண்யா ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் 11- ஆம் வகுப்பு பயில உடனடியாக சோ்க்கப்பட்டாா்.