ஜோலாா்பேட்டை அருகே 650 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 42.65 கோடி மதிப்பிலான கடனுதவியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.
பின்னா் அவா் பேசியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் 7,800 மகளிா் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. 2022-2023-ம் ஆண்டுக்கான வங்கிக் கடன் உதவி இலக்காக ரூ.500 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.315.39 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மொத்தம் 650 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 42.65 கோடியில் வங்கிக் கடனுக்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா். மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி வரவேற்றாா். மாவட்ட பால்வளத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், ஒன்றியக் குழு தலைவா்கள் சத்யா, விஜயா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா, ஒன்றியக்குழு உறுப்பினா் உமா, கந்திலி ஒன்றிய ஆத்மா தலைவா் முருகேசன், முன்னாள் நகா்மன்ற தலைவா் அரசு, உதவி திட்ட அலுவலா்கள் வேதநாயகம், முருகேசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.