ஆம்பூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே கம்மகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் வசிப்பவா் முஹம்மத் இஸ்மாயில். இவா் சம்பவத்தன்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடினா். இதையடுத்து, வீடு இடிந்து விழுந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக அனைவரும் உயிா் தப்பினா். முஹம்மத் இஸ்மாயிலுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த வருவாய்த் துறையினா் மற்றும் உமா்ஆபாத் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.