ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைய உள்ள இடத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் நகரில் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் ரூ.30 கோடியில் கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் அமைய உள்ள இடத்தை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். எம்.பி. கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன், க.தேவராஜி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் பழனிவேல், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.