திருப்பத்தூர்

குடிநீா் குழாய் அமைக்கும் பணி ஆய்வு

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மாதனூா் கிராமத்தில் குடிநீா் விநியோகத்திற்கான பைப்லைன் அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் மாதனூா் கிராமத்தில் 15-ஆவது நிதிக்குழு மானியம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் விநியோகத்திற்கான பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சி. குமாா், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT