வாணியம்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி கிராமம் குறவா் வட்டம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மறைவான பகுதியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த ரேஷன் அரிசி, ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் செல்ல தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 மூட்டை ரேஷன் அரிசியை (ஒரு டன்) பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.