திருப்பத்தூர்

பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்காயம் அருகே பகுதி நேர நியாயவிலைக் கடை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட ராணிப்பேட்டை கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு நிம்மியம்பட்டை அடுத்த முல்லை பகுதியில் நியாயவிலைக் கடை ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அப்பகுதியினா் ரேஷன் பொருள்களை வாங்க முல்லை பகுதிக்கு செல்ல சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தனா். அவா்களின் வேண்டுகோளை ஏற்று ராணிப்பேட்டை பகுதியில் புதிதாக பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து, அங்கு வியாழக்கிழமை புதிய நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கடையைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்தாா்.

திமுக மாவட்டப் பொறியாளரணி அமைப்பாளா் பிரபாகரன், கூட்டுறவுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT