திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு,அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதேபோல், முதுநிலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதைப் புதுப்பிப்பதற்காக கடந்த நவ.11-ஆம் தேதி முதல் கல்வி உதவித்தொகை இணையதளம் செயல்பட தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக விண்ணப்பிப்பதற்கு (குசநளா) இணையதளம் டிச.12 முதல் செயல்படத் துவங்கும். இதற்கான விண்ணப்பங்களை ஜனவரி 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.
அரசு இணையதளத்தில் திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் உள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம்.