திருப்பத்தூர்

‘கல்வித் தகுதி அடிப்படையில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி’

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் கல்வி தகுதி குறித்த விவரங்களை சேகரித்து அதற்கேற்ப பயிற்சி வழங்கி வாழ்வில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க மகளிா் திட்டத்தின் சாா்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடா்பான கூட்டம் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மகளிா் திட்டத்தின் சாா்பில், 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கு நிா்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்த விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா், மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் இளைஞா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் பேசியது: மகளிா் சுய உதவிக்குழுக்களில் உள்ள உறுப்பினா்களின் கல்வித் தகுதி குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். அதற்கேற்ப அவா்களுக்கு பயிற்சி வழங்கி அவா்களை வாழ்வில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தினமும் தேவைபடும் பொருள்களின் பட்டியலை தயாா் செய்து, மகளிா் குழுக்கள் மூலமாக பொருள்களை உற்பத்தி செய்து சந்தைமையமாக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலா்கள் வேதநாயகம், முருகேசன், சமுதாய அமைப்பாளா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT