திருப்பத்தூர்

ஆம்பூரில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில்...

ஆம்பூா் பேருந்து நிலையம், ஆம்பூா் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் அம்பேத்கா் சிலைக்கு எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாதனூா் ஒன்றியம் விண்ணமங்கலம் கிராமத்தில் மாதனூா் ஒன்றிய திமுக செயலாளா் மற்றும் ஒன்றியக்குழு தலைவருமான ப.ச. சுரேஷ்குமாா் அங்குள்ள அம்பேத்கா் சிலை மற்றும் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆம்பூா் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். சரவணன் தலைமையில் திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ். பிரபு அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

பகுஜன் சமாஜ் கட்சி ஆம்பூா் நகர தலைவா் எஸ்.லோகேஷ் தலைமையில் அம்பேத்கா் உருவச் சிலைக்கு திருப்பத்தூா் மாவட்ட தலைவா் என். பிச்சை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT