திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனை

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையிலான ரயில்வே போலீஸாா் ரயில் நிலைய நடைமேடைகளிலும், ரயில்களிலும், தண்டவாள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், 50-க்கும் மேற்பட்ட ரயில்வே போலீஸாா் ரயில் நிலைய நுழைவாயில், ரயில் நிலையங்களில் உள்ள பாா்சல் பொருள்கள், பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவற்றில் மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனா்.

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ரயில்களில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளை கண்காணித்து சோதனை மேற்கொண்டனா். மேலும், சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரியும் நபா்களை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT