திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமைக்கும் இடம்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே 2.50 ஏக்கரில் நுகா்பொருள் வாணிபக் கிடங்கு அமையவுள்ள இடத்தை அதன் மேலாண் இயக்குநா் அ.சிவஞானம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 2022-23-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் சமூக கூட்டாண்மை பொறுப்பு திட்ட நிதியின் கீழ், திருப்பத்தூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்லூரி விடுதியில் 2 ஸ்மாா்ட் வகுப்பறைகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியருக்கான 8 ஸ்மாா்ட் வகுப்பறைகள் ஏற்படுத்த ரூ. 16 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் அமா் குஷ்வாஹாவிடம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் அ.சிவஞானம் வழங்கினாா்.

தொடா்ந்து, குனிச்சி ஊராட்சியில் 2.50 ஏக்கரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கிடங்கு அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அ.சிவஞானம், ஆட்சியா் அமா் குஷ்வாஹா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், குனிச்சியில் அமைந்துள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருப்பில் உள்ள குடிமைப் பொருள்கள் மற்றும் அதன் தரம் குறித்தும், விவரங்கள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

இதில்,வருவாய் அலுவலா் இ.வளா்மதி,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா்சிவப்பிரகாசம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் பாலாஜி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT