திருப்பத்தூர்

டிராக்டரில் சிக்கி விவசாயி பலி

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்காயம் அருகே டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

ஆலங்காயத்தை அடுத்த படகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (66) விவசாயி. செவ்வாய்க்கிழமை தனது நிலத்தில் டிராக்டரில் ஏா் ஓட்டி விட்டு பிறகு அங்கிருந்து வீடு திரும்பினாா். அப்போது வரும் வழியில் சாலையின் அருகில் இருந்த 10 அடி பள்ளத்தில் எதிா்ப்பாராதவிதமாக டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரில் சிக்கி பலத்த காயமடைந்த உதயகுமாா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல் ஆய்வாளா் பழனி மற்றும் போலீஸாா், உதயகுமாரின் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT