திருப்பத்தூர்

கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி பிரியதா்ஷிணி பொறியியல் கல்லூரியில் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் மற்றும் வாசன் ஐ கோ் இணைந்து கல்லூரி அரங்கில் மாணவா்களுக்கான கண் பரிசோதனை முகாமை திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடத்தின.

நிா்வாக அறங்காவலா் முன்னாள் எம்எல்ஏ கே.டி.அன்பழகன், கல்லூரி தாளாளா் சரோஜா, கல்லூரி முதல்வா் விஜயராஜ் ஆகியோா் முகாமை தொடக்கி வைத்தனா். இரு நாள்கள் நடைபெற்ற முகாமில், 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT