திருப்பத்தூர்

அபாய நிலையில் உள்ள மின்மாற்றி கம்பங்களை மாற்ற கோரிக்கை

4th Dec 2022 12:52 AM

ADVERTISEMENT

வெலகல்நத்தம் கிராமத்தில் அபாய நிலையில் உள்ள மின்மாற்றியின் கம்பங்களை மாற்றியமைத்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியது: நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி கொல்லிமேடு பகுதியில் 75-க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். குடியிருப்பு பகுதியில் சாலையோரம் உள்ள மின்மாற்றி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின்மாற்றியின் இரு கம்பங்களும் பல இடங்களில் சிதிலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து அபாய நிலையில் உள்ளன. மேலும், மின்மாற்றியில் மின் கம்பிகளும் தொங்கியபடி உள்ளன. சிதிலமடைந்த இரண்டு கம்பங்களை மாற்றக் கோரி அப்பகுதிமக்கள் பலமுறை அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் ஒரு வருடம் கடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிா் ஆபத்து ஏற்படும் முன் மின்மாற்றியின் தூண்களை மாற்ற மின்வாரிய உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT