திருப்பத்தூர்

ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்:அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

4th Dec 2022 10:56 PM

ADVERTISEMENT

ஆதியூா் பகுதியில் உள்ள ஏரி அருகே வீசப்பட்ட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில், ஆதியூா் பகுதி தனியாா் கல்லூரி எதிரில் உள்ள ஏரிக்கரையில் குப்பைக் கழிவுகள் வீசப்பட்டு கடந்த 15 நாள்களாகியும் அகற்றப்படாமல் உள்ளது.

அந்தச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும், எதிரில் உள்ள கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனா்.

குப்பைக் கழிவுகள் ஏரியில் வீசப்படுவதால், ஏரி மாசடைகிறது. மேலும், கழிவுகளின் துா்நாற்றத்தால் அந்த வழியாகச் செல்வோா் அவதிக்குள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

எனவே, தொடா்புடைய துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், இனி ஏரியில் குப்பைக் கழிவுகளைக் கொட்டாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT