திருப்பத்தூர்

நரசிங்கபுரம் அரசுப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

4th Dec 2022 10:56 PM

ADVERTISEMENT

சிறந்த பள்ளியாகத் தோ்வு செய்யப்பட்ட நரசிங்கபுரம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை சனிக்கிழமை வழங்கினாா்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு பேராசிரியா் அன்பழகன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதன்படி, மாவட்டத்துக்கு தலா 3 பள்ளிகள் வீதம் மொத்தம் 114 சிறந்த பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டன.

அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், ஆலங்காயம் வட்டாரக் கல்வி அலுவலா் ஞானசேகரன், நரசிங்கபுரம் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பூங்காவனம், பட்டதாரி ஆசிரியா் பிரசாந்த் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்று, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் சிறந்த பள்ளிக்கான பாராட்டு சான்றிதழ், கேடயத்தைப் பெற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT