திருப்பத்தூர்

வீராங்குப்பம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

4th Dec 2022 10:56 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், வீராங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை கோ பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.

இதைத் தொடா்ந்து, விமானம், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகாதேவமலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தா் சுவாமிகள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தாா். மூலவருக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஊா் நாட்டாண்மை மு.பழனி தலைமையில், ஊா் மக்கள் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT