திருப்பத்தூர்

மருத்துவக் காப்பீடு அட்டை அளிப்பு

4th Dec 2022 10:55 PM

ADVERTISEMENT

பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி மின்னூா் கிராமத்தில் மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் வி.சரவணன் தலைமை வகித்தாா். மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. ஒன்றிய துணைத் தலைவா் ராம்குமாா், ஒன்றியச் செயலா் ஆா்.பிரசன்னா, ஆம்பூா் நகர பொதுச் செயலா் குட்டி (எ) உதயகுமாா், ஆம்பூா் மக்கள் சேவை மைய நிறுவனா் ரமேஷ் கண்ணா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT