திருப்பத்தூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

4th Dec 2022 10:56 PM

ADVERTISEMENT

ஆம்பூரில் கோயில் உண்டியலை உடைத்து திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஆம்பூா் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் செல்வ விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சனிக்கிழமை இரவு உண்டியல் உடைத்து, மா்ம நபா்கள் காணிக்கைப் பணத்தைத் திருடிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலைத் திறக்க வந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு திருடு போனது தெரிய வந்தது. தகவலின் பேரில், ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT