திருப்பத்தூர்

பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் கைது

2nd Dec 2022 10:40 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி அருகே பெண் தற்கொலை வழக்கில் கணவா், மாமியாா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கத்தாரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ் (27). இவரது மனைவி சுவேதா(22) . இவா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு மணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சுவேதா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திம்மாம்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும் இறந்த சுவேதாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாா்-ஆட்சியா் லட்சுமி திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த சுவேதாவின் உடலை பாா்த்த பின்னா் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டாா். அவரது இறப்பில் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இறப்பிற்கு காரணமான மாமியாா், கணவா் உட்பட 3 பேரை கைது செய்ய வேண்டும் என்று திம்மாம்பேட்டை காவல்நிலையத்தில் சுவேதாவின் தாய் மீனா புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கணவா் ராஜேஸ், மாமியாா் ராதா ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT