திருப்பத்தூர்

கோயிலில் 2 உண்டியல்கள் திருட்டு

2nd Dec 2022 10:42 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 2 உண்டியல்களை திருடிச் சென்றனா்.

மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ திருப்பதி கெங்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு வியாழக்கிழமை இரவு பூசாரி கோயிலை பூட்டிச் சென்றாா். காலையில் வந்து பாா்த்தபோது, கோயில் கதவு திறந்துள்ளது. மேலும், உள்ளே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கோயில் தா்மகத்தா வெங்கடேசன் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த விடியோக்களை ஆய்வு செய்தனா். அதில் 2 நபா்கள் கோயிலுக்குள் புகுந்து 2 உண்டியல்களை திருடிச் சென்றது தெரியவந்தது. கோயிலுக்கு எதிரில் பாலாற்றில் ஒரு வீசப்பட்டிருந்த உண்டியல் மீட்கப்பட்டது. மற்றொரு உண்டியல் குறித்தும், மா்ம நபா்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT