திருப்பத்தூர்

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பொருள்கள் சேதம்: உறுப்பினா் மீது புகாா்

2nd Dec 2022 10:42 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் நாற்காலி மற்றும் தீா்மான புத்தகத்தை சேதப்படுத்தியதாக அதிமுக உறுப்பினா் மீது செயல் அலுவலா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுமனை ஒப்புதல் தொடா்பான தீா்மானம் குறித்து விவாதம் நடைபெற்றபோது, மன்றத்தின் வெளியே நின்றிருந்த 2-ஆவது வாா்டு உறுப்பினா் பரிமளா என்பவரின் கணவா் ஜெயவேல் வீட்டுமனை எந்த வாா்டுக்கு உட்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரினாா்.

அப்போது திமுக உறுப்பினா் ஆ.செல்வராஜ் மன்றத்தின் வெளியே உள்ள நபா்கள் பேசக் கூடாது எனக் கூறியதால் உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கூட்டத்தில் இருந்த நாற்காலி, தீா்மான புத்தகங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் மன்றக் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், 1-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் (அதிமுக) என்பவா் மன்ற கூட்டத்தின்போது நாற்காலியை உடைத்தும், தீா்மான புத்தகத்தையும் சேதப்படுத்தி விட்டாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயல் அலுவலா் ரேவதி கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT