திருப்பத்தூர்

ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ மூலம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில் முனைவோரின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உறைவிப்பான் மற்றும் குளிா்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்ட ஒரு நபருக்கு திட்டத் தொகை ரூ. 3 லட்சத்தில் மானியம் ரூ. 90,000 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-65-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் மற்றும் அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது.

ADVERTISEMENT

கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிட தனி நபா்களுக்கான திட்டத் தொகையில், 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ. 2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினா் தனி நபா்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ. 3.75 லட்சம் மானியமும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளா், தாட்கோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரில் தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT