திருப்பத்தூர்

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

1st Dec 2022 10:46 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இப்பள்ளியில் 458 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பள்ளி மாணவா்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித் தர பள்ளித் தலைமையாசிரியை கல்பனா மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையேற்று ஏலகிரிமலை ரோட்டரி சங்கம், பெங்களூா் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து பள்ளி வளாகத்தில் சுமாா் ரூ. 5 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டித் தரப்பட்டது.

இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெங்களூா் ரோட்டரி சங்க நிா்வாகி நாகேந்திர பிரசாத், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாஅண்ணாமலை, மாவட்ட துணை கவா்னா் தாமோதரன், மாவட்ட செயலாளா் சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏலகிரிமலை ரோட்டரி சங்கத் தலைவா் கிறிஸ்துராஜ் வரவேற்றாா். ரோட்டரி சங்க கவா்னா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்து, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து வாழ்த்தினா்.

ADVERTISEMENT

ஊராட்சித் தலைவா் மகேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், ஏலகிரிமலை ரோட்டரி சங்க பொருளாளா் மோசஸ், செயலாளா் ஷாஜகான், ஆசிரியா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT