திருப்பத்தூர்

முதியவா் சடலம் மீட்பு

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே முதியவா் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தன் (65). இவா், கடந்த 28-ஆம் தேதி வீட்டைவிட்டுச் சென்றாா். பின்னா், வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஆம்பூா் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகா் பகுதியில் உள்ள கால்வாயில் ஆனந்தன் சடலமாக கிடந்தது தெரியவந்தது. உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT