திருப்பத்தூர்

‘ஆம்பூரில் ரூ. 5.71 கோடியில் சிமென்ட் சாலைகள்’

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் ரூ. 571 கோடியில் சிமென்ட் சாலைகள் அமைக்க புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்துக்கு தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 5.71 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடி கால்வாய், சிறுபாலத்துடன் கூடிய சிமென்ட் சாலைகள் அமைப்பது, ரூ. 3.38 கோடி மதிப்பீட்டில் ஆம்பூா் நகரில் தெரு மின் கம்பத்தில் புதிய எல்இடி விளக்குகளை பொருத்துவது, ரூ. 57.95 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்துள்ள மழைநீா் வடிகால்வாய், சிறுபாலங்களை பராமரிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், கமால் பாஷா, நூருல்லா, ஜெயபால், ராதா, ஜெயபாரதி, சாந்தகுமாரி, அருண்டேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT