திருப்பத்தூர்

ராவுத்தம்பட்டி சமுதாய நலக் கூடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ராவுத்தம்பட்டி சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கந்திலி ஒன்றியம், ஆதியூா் ஊராட்சிக்குள்பட்ட ராவுத்தம்பட்டி கிராமத்தில், தமிழக முதல்வரால் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று திங்கள்கிழமை தினமணியில் செய்தி வெளியானது.

அதன்பேரில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயக்குமாா், ஆதியூா் ஊராட்சித் தலைவா் ஆா்.மணிமேகலை ஆனந்தகுமாா், ஊராட்சி செயலா் பி.கோபிநாதன் உள்ளிட்டோா் புதன்கிழமை ராவுத்தம்பட்டிக்கு சென்று சமுதாய நலக்கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அப்பகுதி மக்களிடம் கூறினா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயக்குமாா் கூறுகையில், இக்கட்டடத்தில் சமையல் கூடம், சுற்றுச்சுவா் அமைக்க திட்ட அறிக்கை தயாா் செய்து அனுப்பப்பட உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT