திருப்பத்தூர்

அம்பலூரில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் அரசுப் பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூா்யகுமாா் தொடக்கி வைத்தாா்.

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அம்பலூா் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்யவாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் சக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் வரவேற்றாா். இப்போட்டியில் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

இதில், வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலா் முனிமதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் நா்மதா, திமுக ஒன்றிய செயலாளா் சாமுடி, சிங்காரவேலன், செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், கோகோ, கபாடி, வாலிபால், இறகுப் பந்து, பூ பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளும் மற்றும் தடகளப் போட்டிகள் ஜூனியா், சீனியா், சூப்பா் சீனியா் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் செவ்வாய்க்கிழமை முதல் வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

உடற்கல்வி ஆசிரியா் கிரிதரன் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT