திருப்பத்தூர்

விநாயகா் சதுா்த்தி: திருப்பத்தூரில் போலீஸாா் அணி வகுப்பு

27th Aug 2022 10:10 PM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பத்தூரில் போலீஸாரின் கொடி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் கொடியசைத்து போலீஸாரின் அணி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். தூய நெஞ்சக் கல்லூரியிலிருந்து தொடக்கிய அணி வகுப்பு பிரதான சாலைகளின் வழியாகச் சென்று புதுப்பேட்டை சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT