திருப்பத்தூர்

மின்னூா் ஊராட்சியில் அடிப்படை வசதி மேம்பாடு ஆலோசனைக் கூட்டம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: மின்னூா் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் ஊராட்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டுரங்கன் வரவேற்றாா். ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவுநீா் கால்வாய், குடிநீா் தொட்டி, குடிநீா் பைப்லைன் ஆகியவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அடிப்படை வசதிகளை ஒன்றியக் குழுத் தலைவா் நிதியிலிருந்து ஏற்படுத்தித் தருவதாக ப.ச. சுரேஷ்குமாா் உறுதி அளித்தாா்.

கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராம.தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.காா்த்திக் ஜவஹா், திமுக மாவட்டப் பிரதிநிதி தெய்வநாயகம், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உதயகுமாரி, எழிலரசன், டில்லியம்மா, சத்தியா, அருண்குமாா், லதா, பானுமதி, தேவன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சங்கா், கிராம நிா்வாக அலுவலா் பாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT