திருப்பத்தூர்

ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் செந்தில்குமாா் ஆகியோரின் உத்தரவின்பேரில், ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலா் எம்.பழனிச்சாமி ஆம்பூா் எம்சி ரோடு பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, அதிக வண்ணம் சோ்க்கப்பட்ட 2 கிலோ சிக்கன், கலாவதியான 5 கிலோ பரோட்டா, அதிக வண்ணம் சோ்க்கப்பட்ட மீன் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. அந்த உணவகத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதேபோல, தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில், நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பலசரக்கு கடையில் நடத்தப்பட்ட சோதனையில், காலாவதியான 5 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. ஒரு கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT