திருப்பத்தூர்

வாணியம்பாடியில் எஸ்.பி. ஆய்வு

22nd Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி பகுதிகளில் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

வருகிற 31-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், வாணியம்பாடியின் முக்கிய பகுதிகளான நியூ டவுன், ஜீவா நகா், பெருமாள்பேட்டை, பஜாா் பகுதி, அம்பூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன், வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, எஸ்.பி. பாலகிருஷ்ணன் வாணியம்பாடி போலீஸாரை தொடா் வாகன தணிக்கை மற்றும் தங்கும் விடுதிகளைக் கண்காணிக்க உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT