திருப்பத்தூர்

ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீா்: எம்.பி., எம்எல்ஏ ஆய்வு

21st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே உள்ள ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதியில் எம்.பி., எம்எல்ஏ, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கட்டேரி ஊராட்சியில் இரண்டு ரயில்வே தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கட்டேரி ஊராட்சிக்குள்பட்ட லாரி ஷெட் பகுதியில் உள்ள ரயில்வே தரைப்பாலம், பக்ரிதக்கா பகுதியில் ரயில்வே தரைப் பாலத்தையும் சுற்றுப் பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த இரு ரயில்வே தரைப் பாலங்களைப் பயன்படுத்தி வருகின்றனா்.

மழைக்காலங்களில் இந்த இரு ரயில்வே தரைப்பாலங்களிலும் மழைநீா் குளம்போல் தேங்கி விடுவதால், மக்கள் 3 முதல் 6 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திருவண்ணாமலை எம்.பி. சி.என். அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) மற்றும் அதிகாரிகள்சனிக்கிழமை அந்த பாலங்களை ஆய்வு செய்தனா்.

பின்னா், இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை அதிகாரிகளிடமும், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவிடம் கூறி பணியை மேற்கொள்வதாக எம்.பி. சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

பின்னா், ரயில்வே மண்டல முதுநிலை பொறியாளா் மயிலேரி, உதவி மண்டல பொறியாளா் விகாஸ் யாதவ் ஆகியோரிடம் இந்த பணி மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT