திருப்பத்தூர்

பொன்னியம்மன் கோயில் திருவிழா

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி பொன்னியம்மன் கோயில் திருவிழா செவ்வாய், புதன்கிழமை இரு நாள்கள் சிறப்பாக நடைபெற்றன.

வாணியம்பாடி அம்பூா்பேட்டையில் அமைந்துள்ள நகரின் முக்கிய திருவிழாவான பொன்னியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நடைபெற்றது. தொடா்ந்து, புதன்கிழமை அம்மனுக்கு மலா் அலங்காரம், பூஜைகள், விசேஷ அபிஷேகங்கள், இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொன்னியம்மன் கோயில் பூங்கரகம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா, பல்வேறு இசை வாத்தியங்கள், சேவாட்டம், நையாண்டி மேளம், வாண வேடிக்கை நடைபெற்றன. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்து 1,000-க்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன்களைச் செலுத்தினா். டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT