திருப்பத்தூர்

திருப்பத்தூா்: சாலையில் வீசப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க நகராட்சிப் பணியாளா்கள் வராததால் மக்கள் குப்பைகளை தெருவில் வீசி செல்கின்றனா். இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளிலும் துப்புரவுப் பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல பகுதிகளில் குப்பைகளைப் பெறுவதற்கு துப்புரவுப் பணியாளா்கள் தொடா்ந்து வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் குப்பைகளை சாலையில் வீசி செல்லும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருப்பத்தூா் சாலைகள் குப்பைகள் குவிந்து காணப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கினறனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT