திருப்பத்தூர்

இரு வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் பலி

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: இரு வேறு இடங்களில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

குடியாத்தம் அடுத்த கண்ணித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சண்முகம் (34). இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சண்முகம் குடியாத்தம்-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

ஆம்பூா் காமராஜா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மனைவி பவுனம்மாள் (62). இவா், செவ்வாய்க்கிழமை இரவு பச்சகுப்பம்-ஆம்பூா் ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

சடலங்களை மீட்ட ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT