திருப்பத்தூர்

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் புதன்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூா், காமராஜ் நகரில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 9-ஆம் தேதி காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, தினமும் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. அதையடுத்து, பூங்கரகம், தீச்சட்டி திருவீதி ஊா்வலம் கோயிலில் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை சென்றடைந்தது.

ADVERTISEMENT

மேலும், பக்தா்கள் அலகு குத்திக்கொண்டு, பேருந்து, வேன், ஆட்டோவை இழுத்துச் சென்றனா்.

இரவு 7 மணியளவில் தீ மிதித்தல், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை இரவு இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் நகர காவல் ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT