திருப்பத்தூர்

‘விவசாய நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை’

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: காப்புக்காடு அருகில் உள்ள விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காப்புக்காட்டை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் வன உயிரினங்களின் வழித்தடங்களின் குறுக்கே வன உயிரினங்கள் பட்டா நிலப்பகுதிக்குள் வராமல் தடுக்க மின்வேலிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணியில் இருக்கும் வனப் பணியாளா்களுக்கும், வன உயிரினங்களுக்கும் உயிா்ச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

ADVERTISEMENT

எனவே, மின் வேலி அமைத்தல், மீன் வலைகள், கம்பி வலைகள் உள்ளிட்ட தடுப்புகள் அமைத்தல் மற்றும் வன உயிரினங்களின் வழித் தடங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்கள் காப்புக்காட்டையொட்டியுள்ள பட்டா நிலப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT