திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வாணியம்பா: வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் கட்டடப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி பஷீராபாத் 3-ஆவது தெருவில் இக்ராம் என்பவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். அங்கு நியூடவுன் ஜாா்ஜ்பேட்டையைச் சோ்ந்த கோபால் (55) என்பவா் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டின் வெளியே கட்டடப் பணிக்காக கட்டியிருந்த சாரத்தை கழட்ட முற்பட்டபோது, எதிா்பாராத விதமாக அவருடைய கை சாலையில் உள்ள உயா் மின் கம்பி மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனே மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில், நகர காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், அவரது சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT