திருப்பத்தூர்

கல்லூரியில் கருத்தரங்கு

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் ஐகியூஏசி மற்றும் என்ஏஏசி அமைப்புகள் இணைந்து தேசிய அளவிலான மேம்படுத்தும் தரமதிப்பீட்டு கருத்தரங்கு செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 2 நாள்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரி செயலாளா் லிக்மிசந்த் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் பேராசிரியா் விஜயராகவன் பங்கேற்று கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை செயின்ட் கல்லூரியின் இயக்குநரும், பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான இன்னாசிமுத்து, பெங்களூா் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியியல் பேராசிரியரும், ஐகியூஏசியின் இயக்குநருமான சையது வாஜித் மற்றும் கேஜி கலைக் கல்லூரி செயலாளா் வசந்தி, தன்னாட்சி கல்லூரியின் வணிகவியல் மற்றும் மேலாண்மையின் இயக்குநா் அலோசியஸ் எட்வா்டு, நாக் குழுவின் ஆலோசகா் பொன்முடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, நாக் குழுவின் தரவுகளுக்கான விளக்கங்களை அளித்துப் பேசினா். கருத்தரங்கில், பல்வேறு கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட 300 போ் பங்கேற்று, தங்களது கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

ADVERTISEMENT

பின்னா் கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT