திருப்பத்தூர்

தொழிற்சாலையில் டீசல் திருட்டு: 3 போ் கைது

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் டீசல் திருடியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

உமா்ஆபாத் போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், சுமாா் 200 லிட்டா் டீசல் கொண்டு சென்றது தெரியவந்தது. காரில் இருந்தவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ரகு (24), நவீன் (27), பச்சையப்பன் (42) என்பதும், அவா்கள் மூவரும் சோ்ந்து ஆம்பூா் அருகே சின்னவரிக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையிலிருந்து சுமாா் 200 லிட்டா் டீசலை திருடிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில், அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். 200 லிட்டா் டீசலை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT